அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்த்தால் மோடிக்கு பயம் - ராகுல்காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் வரி விதிப்பு மற்றும் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் தொடர்ந்து அவமதிப்பு கருத்துக்களை தெரிவித்து வந்த போதும், பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்ததாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Night
Day