எழுத்தின் அளவு: அ+ அ- அ
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டாவிடம் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. மீண்டும் வரும் 29ம் தேதி இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல சமையல் கலைஞரும் நடிகரும் தயாரிப்பாளருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் துறையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, ஜாய் கிரிசில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜூம் விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட மகளிர் ஆணையம் இருவரிடம் இருந்தும் விளக்கங்களை பெற்றது. பின்னர் அடுத்த கட்ட விசாரணைக்காக மீண்டும் வரும் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.