பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அர்ஜென்டினா அதிபர் உடனான சந்திப்பு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின் தொடர்ந்து போரை நடத்துவது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், அவர் ஏன் இந்தப் போரைத் தொடர்கிறார் என தெரியவில்லை எனவும் வினவினார். அவர் ஒரு வாரத்தில் வென்றிருருக்க வேண்டிய போரை நான்கு ஆண்டுகளாக புடின் இழுத்தடித்து வருவதாக விமர்சித்த ட்ரம்ப், இந்த போரில் சுமார் 15 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்திருக்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், BRICS கூட்டமைப்பு அமெரிக்க டாலருக்கு எதிரான தாக்குதல் என குற்றஞ்சாட்டிய ட்ரம்ப், பிரிக்ஸில் இருந்தால் அதிக வரி விதிக்கப்படும் என கூறிய உடன் பல நாடுகள் விலகியதாகவும் தெரிவித்தார். டாலரையே மிக வலுவானதாக நாங்கள் கருதுவதாக கூறிய ட்ரம்ப், டாலரை கையாள விரும்புவர்களுக்கு அதிக நன்மை உண்டு என்றார்

Night
Day