மாணவனை "மணல் சிற்பியாக" மாற்றிய ஓவிய ஆசிரியர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அரசு ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார். திருக்கோவிலூர் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஸ்ரீராம் என்ற மாணவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் ஓவிய மீது இருந்த ஆர்வத்தை கண்டு பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் மணல் சிற்பம் பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில் ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி மாணவன், மணலில் நடனமாடும் மங்கை மற்றும் ஏர் கலப்பையுடன் இருக்கும் விவசாயி போன்ற உருவங்களை தத்துரூபமாக வரைந்து அசத்தி உள்ளார். மேலும், ஓவிய ஆசிரியருக்கு பள்ளி தலைமையாசிரியர், மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Night
Day