தொடர் கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 450 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 44 புள்ளி 28அடியாகவும், நீர் இருப்பு 40 புள்ளி 67 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையின் பாதுகாப்புக்கருதி அணைக்கு வரும் நீரின் அளவான  2ஆயிரத்து450 கனஅடியாக நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பு காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு  6 வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day