தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 16 சென்டி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கத்திவாக்கம், மணலி, உள்ளிட்ட பகுதிகளில் தலா 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை விம்கோ நகரில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

இதேபோல் நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் 8.6 சென்டி மீட்டரும், உதகையில் 6.5 சென்டி மீட்டர், கோத்தகிரி, 6.2 சென்டிமீட்டர், எடப்பள்ளி 6 சென்டி மீட்டர், பாலகொலா 5.1 சென்டிமீட்டர் மற்றும் எமரால்டு 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

varient
Night
Day