டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. தீபாவாளி பண்டிகை கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. ஆனால் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹரியானா உள்பட டெல்லியின் 14 மாவட்டங்களில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை மட்டும் பட்டாசுகள் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது எனவும் அதற்கான தொடரும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசுகள் வெடித்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day