ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி; பதக்கங்களை குவிக்கும் இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் வசமாகியுள்ளன. 

கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வரும்  16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அணிகளுக்கான 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் குர்பிரீத் சிங், ராஜ்கன்வார் சிங் சந்து, அங்குர் கோயல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,733 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.  ஆண்களுக்கான டிராப் பிரிவில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் 107 புள்ளிகள் எடுத்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தியா இதுவரை 52 தங்கப்பதக்கங்களுடன் 103 பதக்கங்களை குவித்துள்ளது.

Night
Day