ராகுல் காந்தியா, ராஜீவ் காந்தியா, ஸ்டாலின் CONFUSE...! காற்றில் பறந்த தமிழரின் மானம்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்ட வாக்குரிமை பேரணியில் தமிழகத்தின் விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின் செய்த காரியம், நெட்டிசன்களுக்கு, அளவெடுத்து தைக்கப்பட்ட, CONTENTஆக மாறியிருக்கிறது... அப்படி என்ன பேசினார் ஸ்டாலின் பார்க்கலாம் விரிவாக...

தமிழகத்தின் விளம்பர முதலமைச்சர் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தாலே "இன்னைக்கு ஒரு பிடி" என்ற ரீதியில் "இன்னைக்கு அடிபொளி CONTENT ரெடி" என காதுகளை தீட்டிக்கொண்டு நெட்டிசன்கள் உற்றுநோக்குவது வழக்கம்.... 

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்பதற்கு பதிலாக இளமை புகுத்தி விடும் என திருவள்ளுவரே சொன்னதாக ஸ்டாலின் பேச... சர்பிரதாயப்படி செய்ய வேண்டிய சடங்குகளையும் நெட்டிசன்கள் முறைதவறாமல் செய்திருந்தனர்....

இதில் தமிழையும் திருவள்ளுவரையும் சொல்லிலும் செயலிலும் நெஞ்சிலும் தூக்கி சுமந்த இயக்கம் திராவிட இயக்கம் என பேசிய அதே வாயால் திருக்குறளை தப்பு தப்பாக ஸ்டாலின் உளறிக்கொட்டியது திருவள்ளுவரே டென்ஷன் ஆகும் அளவுக்கு இருந்தது... 

இதிலும் திருவள்ளுவரும் விளம்பர முதலமைச்சரும் ஸ்டாலினும் ஒன்றாக இணைந்து எழுத்தாணி பிடித்து எழுதுவது போல உடன்பிறப்புகள், CREATE செய்து வெளியிட்ட AI வீடியோவுக்கு "இன்னமுமா இந்த நாடு அழியாம இருக்கு" என இணையவாசிகள் கமெண்டுகளை வீசியதில் இருந்தே அவர்களின் ஆதங்கம் புரியும்.... 

ஜனவரி மாதம் 15ம் தேதிய சுதந்திர தினம் என குறிப்பிட்டது... 

69ம் தேதி பிப்ரவரி மாதம் 10ம் தேதி என கிரிகோரியன் நாள்காட்டியிலேயே இல்லாத தேதியை கண்டுபிடித்தது... 

இரண்டாயிரத்து ஐ-நூறையும் ஆயிரத்து ஐ நூறையும் கூட்டினால் 5 ஆயிரம் வரும் என கணித மேதை ராமானுஜமே அசத்து போகும் அளவுக்கு கூட்டல் கணக்கை பின்னி பெடலெடுத்தது....என விளம்பர முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனை சம்பங்களுக்கு கணக்கே இல்லை என்றே சொல்ல வேண்டும்....

இப்படி மைக்கை பிடிக்கும் போதெல்லாம் வாய் குளறி உளறிக்கொட்டுவது வாடிக்கையாகவே நிகழ்ந்து வந்த நிலையில் "குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள்" என்ற தமிழ் அர்த்தம் கொண்ட தெலுங்கு பழமொழியை அச்சுபிசகாமல் விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது "ஏன் திமிங்கலம் எப்புடி" என்ற அளவுக்கு இருந்தது....

இந்தநிலையில் தான் பீகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த வாக்குறிமை பேரணியில் பங்கேற்று பேசிய விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி என அழைப்பதற்கு பதிலாக அவரது தந்தை ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லி அழைத்தது இந்திய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.. மேடையில் ராகுல் காந்தியை வரவேற்பதாக நினைத்து "மை டியர் பிரதர் ராஜீவ் காந்தி அவர்களே..! என ஸ்டாலின் தவறாக குறிப்பிட ஒட்டுமொத்த கூட்டத்தினரும் கூச்சலெழுப்பினர்... ஆனால் அப்போதும் கூட தான் செய்த தவறு என்னவென்று புரியாமல் ஸ்டாலின் திகைத்து நின்ற தருணத்தில், மேடையில் இருந்தவர்கள் தவறை சுட்டிக்காட்டிய பின்பே சுதாரித்துக்கொண்டு "மை டியர் பிரதர் ராகுல் காந்தி" என குறிப்பிட்டு பேசினார் ஸ்டாலின்.... இதனை PATCH WORK என தலைப்பிட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்...

இதனை சிறு பிழை என அப்படியே கடந்துவிட முடியாது... ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக, 8 கோடி மக்களின் பிரதிநிதியாக... தமிழகத்தின் மாண்பை எடுத்துரைத்து, தமிழர்களின் கவுரவத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்துக்கொண்டு, பீகார் மக்கள் முன்னிலையில் எதை பேசுகிறோம்.. என்ன பேசுகிறோம்.. என்பது கூட தெரியாமல் ஸ்டாலின் வழக்கம் போல உளறிக்கொட்டியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் வெட்கி தலைகுனிய வைத்துள்ளது... 

தமிழகத்தில் தமிழக மக்கள் மத்தியில் மேடைகளில் உளறுவதை தலைவிதியே என மக்கள் கடந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது பீகார் வரை சென்று ஸ்டாலின் உளறிக்கொட்டியிருப்பது தமிழர்களின் மானத்தை இந்திய அளவில் அடகு வைத்திருப்பதாகவே விமர்சிக்கப்படுகிறது... 

துண்டு சீட்டு மூலமாகக் கூட தனது உரையை பிழை இல்லாமல் பேசத்தெரியாமல் தொடர்ந்து உளறல்களை கொட்டிவரும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகமே, மாநிலத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்குமான மூல காரணம் என்ற விமர்சன குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது..


Night
Day