ஒர்க்க்ஷாப் உரிமையாளரை துரத்தி, துரத்தி வெட்டிய சகோதரர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை அருகே காரை பழுது பார்க்க மறுத்த கடையின் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சகோதர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, சுத்தமல்லி அருகே உள்ள ஹவுஸிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முகமது அலி ஃபாரூக். இவர், சுத்தமல்லி விலக்கு பகுதியில் வாகன பழுது பார்க்கும் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு, ஃபாருக் தனது கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது, சுத்தமல்லி சீனிவாசா நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது காரில் உள்ள பழுதை நீக்க வருமாறு அழைத்துள்ளார். கடையை அடைத்துவிட்டதால் பழுதை நீக்க இயலாது என ஃபாரூக் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தம்பி ராஜகோபால் என்பவரை அழைத்துக் கொண்டு ஃபாருக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். 

படுகாயமடைந்த ஃபாரூக்கின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஆனந்த் மற்றும் ராஜகோபால் ஆகியோர் அரிவாளுடன் கடைக்குள் புகுந்து ஃபாரூக்கை வெட்டுவதும், அதில் அவர் தப்பிக்க முயற்சிப்பதும் பதிவாகி உள்ளது. 

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியயோடிய ஆனந்த் மற்றும் ராஜகோபாலை தேடி வருகின்றனர்.

Night
Day