ஏ.டி.பி. டென்னிஸ் இரட்டையர் தரவரிசை பட்டியல் - போபண்ணா முதலிடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏ.டி.பி. டென்னிஸ் இரட்டையர் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் எப்டென் இணை முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தினர். இதனையடுத்து, சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போண்ணா நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஆகியோரை தொடர்ந்து, உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த 3வது வீரர் என்ற பெருமையை போபண்ணா பெற்றுள்ளார். 

Night
Day