ஆசிய தடகள சாம்பியன்சிப் - இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி என ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றினர். 

மூவாயிரம் மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் ஒட்டப் போட்டியில் அவினாஷ் சாபிள், நூறு மீட்டர் மகளிர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜோதி யர் ராஜ், தொடர் ஓட்டத்தில் ஜிஸ்னா மாத்தீவ், ரூபல், ரஜிதா மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவு தொடர் ஓட்டத்தில் ஜெய் குமார், தரம்வீர் சௌத்ரி, மானு மற்றும் விஷால் ஆகியோர் வெள்ளி வென்றனர். இதேபோல் நீளம் தாண்டுதலில் ஆன்சி சோஜன் வெள்ளியும், ஷைலி சிங் வெண்கலமும் வென்றனர்.

Night
Day