எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும், நாளையும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை எச்சரிக்கையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதனையடுத்து நாளை கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், வரும் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.