நிலத்தகராறில் பெண்ணின் ஆடையை கிழித்த கொடூரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் நிலத்தகராறில் ஆடையை கிழித்து பெண் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோட்டாம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர், தனது மருமகளுடன் இணைந்து தன்னுடைய நிலத்தில் வரப்பு மடித்ததாக தெரிகிறது. அப்போது இது தன்னுடைய நிலம் எனக்கூறி வரப்பு மடித்த இரு பெண்களுடன் சின்ராசு என்பவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாக்குவாதம் செய்த பெண்ணின் ஆடையை கிழித்து மானப்படுத்திய சின்ராசு மற்றும் அவரது உறவினர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day