அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம், நடுவச்சேரி கிராமத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் புதுப்பித்து வழங்குவதில் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் 127 விவசாயிகளுக்கு கிடைக்காமல் போனதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் 4 வருடங்களாக நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day