அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி அருகேயுள்ள துரைராஜ் நகரில் அமைச்சர் ஐ.பெரியசாமி வசித்து வருகிறார். இதே பகுதியில் உள்ள செவாலியர் சிவாஜி நகரில் அவரது மகள் இந்திரா குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில், இந்திராவின் வீட்டில் 5 பேர் கொண்ட ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவானது, வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி போன்றவற்றை விசாரிக்கும் ஒரு துறை என்பதால், அமைச்சரின் மகள் இந்திரா சமீபத்தில் சொத்துக்கள் ஏதேனும் வாங்கி, அதற்குரிய ஜிஎஸ்டியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் மகள் இந்திரா ஆகிய மூவரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அமலாக்கத்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி இருக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி நுண்ணரிவு பிரிவு அதிகாரினள் சோதனையை மேற்கொண்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day