52 காலி பணியிடங்களுக்காக திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இயங்கி வரும் ஷூ தயாரிப்பு ஆலையில் உள்ள 52 காலி பணியிடங்களுக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

போச்சம்பள்ளி அருகே சிப்காட் பகுதியில் உள்ள தனியார் ஷூ தயாரிப்பு ஆலையில் உள்ள பல்வேறு துறைகளில் 52 காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆலையில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றதால், தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் தங்களின் சுய விவரங்களுடன் திரண்டனர். ஆலையில் இருந்து 8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நபர்களுக்கு மட்டும் வேலை வழங்க முன்னிரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் ஒன்று திரண்டதால் அந்த பகுதியில் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அலைமோதியதாக இளைஞர்கள் திரண்டு வந்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day