வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடையாறு, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு வாசிகள் தங்களது வீடுகளின் முன்பு அனுமதியின்றி 'நோ பார்க்கிங்' போர்டுகளை வைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங்' போர்டுகள் மற்றும் தடுப்புகள் வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

varient
Night
Day