ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட் போனை செய்தது ஆப்பிள் நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னணி நிறுவனமான ஆப்பிள், தனது புதிய தயாரிப்புகளை ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி அமெரிக்காவின் கலிபோர்னியாவின் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ்-4 ஆகிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஐபோன் 16 புரோ மேக்ஸ்ன் விலை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 990 ரூபாயாகவும், ஐபோன் 16 புரோ மாடல் ஸ்மார்ட்போனின் விலை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Night
Day