மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வினாத்தாள் கசிவு காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த இண்டஸ்ட்ரியல் லா என்ற பாட தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இண்டஸ்ட்ரியல் லா என்ற பாட வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளில் அதற்கான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு தொடர்பாக பல்கலைக்கழகம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Night
Day