தஞ்சாவூர் விளாரில் புதிய அன்னதான கூடத்தை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திறந்து வைத்தார்

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சங்கிலி கருப்பையா சுவாமி திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான கூடத்தை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு அருகே விளார் தெற்கு தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பையா சுவாமி திருக்கோவில் புதிதாக அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று அன்னதான கூட கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

Night
Day