எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு அருகே விளார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரனார், பொம்மியம்மாள், அருள்மிகு வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், வன துர்க்கை அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு விளார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரனார், அருள்மிகு பொம்மியம்மாள் அருள்மிகு வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், அருள்மிகு வன துர்க்கை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இத்திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து ஹோமம் செய்யப்பட்டது. பின்னர், முளைப்பாரி ஊர்வலம், செண்டை மேளம் முழங்க, நாட்டிய குதிரைகள் அணிவகுப்புடன் புனித நீர் யானை மீது கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து கோயிலில் இன்று நடைபெற்ற கோ பூஜை வழிபாடு, கஜ பூஜை மற்றும் அஸ்வ பூஜை வழிபாட்டில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து கோவில் புதிய மண்டபத்திற்கு மலர் தூவி சிறப்பு ஆராதனை செய்த புரட்சித்தாய் சின்னம்மா, பின்னர், கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வனதுர்க்கை அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். மேலும் அதே பிரகாரத்தில் மற்றொரு சன்னதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரனார், அருள்மிகு பொம்மியம்மாள், அருள்மிகு வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன் சன்னதியில் புரட்சித்தாய் சின்னம்மா விளக்கேற்றி, சுவாமிகளுக்கு மலர்கள் தூவி வழிபட்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையில் பங்கேற்ற கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, புனித நீர் வைக்கப்பட்டுள்ள கலசங்களுக்கு மலர்கள் தூவி வழிபட்டு சிறப்பு பூஜை செய்தார். அதன் பின்னர் யாகசாலையிலிருந்து புனிநீர் கடங்கள் மேளதாளங்கள் முழங்க புறப்பாடாகி, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, பக்தர்களின் பக்தி முழக்கம் விண்ணைப் பிளக்க மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது.
பின்னர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அருள்மிகு வீரனார், அருள்மிகு பொம்மியம்மாள், அருள்மிகு வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், அருள்மிகு வன துர்க்கை அம்மன் சிலைகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வஸ்திரங்கள் வழங்கினார். அதன்பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சுவாமியையும் அம்பாளையும் வணங்கி வழிபட்டார்.
இதனையடுத்து, சிவாச்சாரியார்களுக்கும் கோவில் பூசாரிகளுக்கும் புரட்சித்தாய் சின்னம்மா வஸ்திரங்கள் வழங்கினார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கோவில் அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற புரட்சித்தாய் சின்னம்மா, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இதனைத் தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கும்பாபிஷேக விழாவில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.