எழுத்தின் அளவு: அ+ அ- அ
கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட 60 வயது முதியவர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான மோகன், கொரோனா தொற்று பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே மோகன் இறதுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே மற்ற மாநிலங்களை காட்டிலும் கொரோனா நோய் தொற்று குறைவாகவே இருப்பதாகவும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மாதங்களாகவே கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில் தற்போது மீண்டும் உயிரிழப்பு பதிவாகியிருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமெடுக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.