பாஜக இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து முகுந்தன் விலகல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி என குறிப்பிட்டு முகுந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பாமக இளைஞரணி சங்க தலைவராக நியமிக்கப்பட்டதாகவும், சொந்த காரணங்களுக்காக அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர் ராமதாஸ்தான் என்றென்றும் தனது குலதெய்வம் எனவும் அன்புமணி தான் தங்களின் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன் என்றும் முகுந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த டிசம்பர் மாதம் பாமக பொதுக்குழுவில் மருத்துவர் ராமதாஸ் மகளின் மகனான முகுந்தனுக்கு இளைஞர் சங்கத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதால், அன்புமணி கடும் அதிருப்தியில் இருந்தார். அதனை தொடர்ந்தே ராமதாஸ் - அன்புமணி இடையே மனகசப்பு அதிகரித்தது. இந்நிலையில், கட்சியினரை தவறான பாதைக்கு திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாகவும் அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியாக குற்றம்சாட்டிய நிலையில் பதிவியிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.

Night
Day