எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஊத்து, காக்காச்சி, மாஞ்சோலை, நாலுமுக்கு ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 103 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 17 அடி உயர்ந்து 135 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விரைவில் சேர்வலாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.