கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு,,,!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 போலீசாரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

நகை திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை கடந்த 28ம் தேதி போலீசார் கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், கண்ணன், ஆனந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் திருப்புவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அவர்களது நீதிமன்றக் காவல் தற்போது நிறைவடைந்த நிலையில், 5 காவலர்களும் காணொலி காட்சி மூலம் மீண்டும் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 5 பேருக்கும் வரும் 29ம் தேதி வரை மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டார்.

Night
Day