புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்! வென்றெடுப்போம்!!

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்து, புரட்சித்தலைவி அம்மா கட்டிக்‍காத்த மாபெரும் அரசியல் இயக்‍கமான அஇஅதிமுகவில் அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அன்புத் தொண்டர்கள் அனைவருக்‍கும் அழைப்பு விடுத்திருப்பது பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. சோதனை மிகுந்த இந்த நேரத்தில் அஇஅதிமுகவை காப்பாற்றுவதற்கான ஒரே வழி இதுதான் என்று பொதுமக்‍களும், கழகத் தொண்டர்களும் உறுதியோடு நம்புகிறார்கள்.

தமிழக மக்‍களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்து, 10 ஆண்டுகளுக்‍கும் மேலாக, தமிழக முதலமைச்சராக கோட்டையில் கோலோச்சிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தனக்‍குப் பின்னர் அஇஅதிமுக என்ற மகத்தான மக்‍கள் இயக்‍கத்தை சிறப்பாக வழிநடத்த, இவர்தான் தகுதி மிக்‍கவர் என்று, புரட்சித்தலைவி அம்மாவை அடையாளம் காட்டிச் சென்றார். 

1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திய செய்தி மக்‍களின் நெஞ்சங்களில் பேரிடி​யாய் இறங்கியது. அஇஅதிமுக அடியோடு அழிந்துவிடும் என எதிர்க்‍கட்சிகள் எக்‍காளமிட்டன. இந்த நிலையில்தான், புரட்சித்தலைவரால் ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட புரட்சித்தலைவி அம்மா, கழகத்தைக் கட்டிக்‍காக்‍கும் பெரும் பொறுப்பை ஏற்​றுக்‍கொண்டார். எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிச்சல், அரசியல் எதிரிகளும் வியக்‍கும் அறிவாற்றல், கோடானு கோடி மக்‍களின் பேராதர​வு ஆகியன புரட்சித்தலைவி அம்மாவின் தலைமைக்‍கு கிரீடம் சூட்டின.

தமிழக மக்‍களின் பேராதரவோடு 1991ம் ஆண்டு முதன்முறையாக, தமிழக முதலமைச்சராக மாண்புமிகு அம்மா பதவியேற்றார். அம்மாவுக்‍கு, பொதுமக்களிடையே அதிகரித்து வந்த செல்வாக்‍கை கண்டு பொறுத்துக்‍கொள்ள முடியாத சில சக்‍திகள், 1996ம் ஆண்டு தொடங்கி, பல்வேறு புனையப்பட்ட பொய் வழக்‍குகளை தொடர்ந்தன. சட்டப்போராட்டங்கள் மூலம் அவற்றை எல்லாம் புறம்தள்ளி, ஒவ்வொரு வழக்‍கிலும் வெற்றி வாகை சூடினார், புரட்சித்தலைவி அம்மா. 

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி, உலகத் தமிழர்களை எல்லாம் கண்ணீர் கடலில் ஆழ்த்தி​விட்டு, புரட்சித் தலைவி அம்மா திடீரென மறைந்தபோது, ஒன்றரை கோடிக்‍கும் மேற்பட்ட தொண்டர்களைக்‍ கொண்ட மாபெரும் அரசியல் இயக்‍கமான அஇஅதிமுக-வையும், கழக அரசையும் கட்டிக்‍ காக்‍கும் மிகப்பெரிய பொறுப்பை, புரட்சித்தாய் சின்னம்மாவிடம் கழகத்தினர் வழங்கினார்கள். மறைந்த புரட்சித்தலைவி அம்மாவின் அருகிருந்து 33 ஆண்டுகளாக அவரை கண்ணின் மணிபோல் காத்து, பல்வேறு நெருக்‍கடிகளிலும் சோதனைகளிலும் அம்மாவுக்‍கு உறுதுணையாக நின்று, தியாக வேள்வியில் தன்னையே அர்ப்பணித்துக்‍ கொண்டார் புரட்சித்தாய் சின்னம்மா. 

மாண்புமிகு அம்மாவின் மறைவுக்‍குப் பின்னர், கழகத்தைக்‍ காப்பதற்காக, தன் தவ வாழ்வை, தியாக வாழ்வை மீண்டும் தொடங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா. கழகத்தின் ஒட்டுமொத்த தொண்டர்களும், நிர்வாகிகளும், சின்னம்மாதான், கழகத்திற்கு தலைமையேற்க வேண்டும் என்ற தங்களின் ஒருமித்த விருப்பத்தை தெரிவித்ததை தொடர்ந்து, கழகத்தை கட்டுக்‍கோப்போடு வழிநடத்திக் காப்பாற்ற, தொண்டர்களாலும், பொதுக்‍குழு, செயற்குழு உறுப்பினர்களாலும் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார், புரட்சித்தாய் சின்னம்மா. 

அம்மாவின் மறைவுக்‍குப் பின்னர், ஒருபக்‍கம் எதிரிகள்... மறுபக்‍கம் துரோகிகள்... இந்தச் சூழ்நிலையில், கழகத்தை உறுதியாக காத்து நின்று, சட்டமன்ற உறுப்பினர்களை ஒற்றுமையோடு இருக்‍கச் செய்து, எந்த சூழ்ச்சியும் வென்றிடாத வகையில், தியாக உணர்வோடு செயலாற்றி, மீண்டும் அம்மாவின் ஆட்சியை நிலைநிறுத்தினார் புரட்சித்தாய் சின்னம்மா. 

ஆண்டுகள் பல உருண்டோடி, எத்தனையோ அரசியல் நிகழ்வுகள், மாற்றங்கள் நடந்தேறிவிட்டன. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற்றது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை என்றுதான் சொல்லவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்‍கமாக, நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்திருந்தால் கழகம், மாபெரும் வெற்றி பெற்றிருக்‍கும் என்பது புரட்சித்தாய் சின்னம்மாவின் அசைக்‍க முடியாத நம்பிக்‍கையாகும். 

இயக்‍கத்தில் இருக்‍கும் ஒருசில நிர்வாகிகள் கட்சி நலனை புறந்தள்ளிவிட்டு சுயநலப்போக்‍கோடு செயல்பட்டு, இயக்‍கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால் கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலம் கேள்விக்‍குறியாகி இருப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.  

இனியும் பொறுமையாக இருந்தால், புரட்சித் தலைவருக்‍கும் புரட்சித் தலைவிக்‍கும், இயக்‍கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டிருக்‍கும் கோடான கோடி தொண்டர்களுக்‍கும், தமிழக மக்‍களுக்‍கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகிவிடும் என்பது புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்து. இயக்‍கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என, புரட்சித்தாய் சின்னம்மா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  

கழக நிர்வாகிகள் அனைவரும் சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து, தமிழக மக்‍கள் நலனையும், இயக்‍கத் தொண்டர்களின் உணர்வையும் மதித்து ஓரணியில் நின்று ஒற்றுமையோடு இணைந்து செயல்பட்டால் மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர முடியும் - 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்‍க முடியாது - கட்சியின் நலனையும் தமிழக மக்‍கள் நலனையும் கருதி, ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என கழகத் தொண்டர்கள் அனைவருக்‍கும் புரட்சித்தாய் சின்னம்மா அழைப்பு விடுத்துள்ளார்.

புரட்சித்தாய் சின்னம்மாவின் இந்த அழைப்பு சரியான நேரத்தில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்றும், இதனை நிறைவேற்றினால் தமிழக மக்‍களின் எதிர்காலம் ஒளிமயமான எதிர்காலமாக அமையும் என்றும் அரசியல் பார்வையாளர்கள், நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு இயக்‍கங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் தெரிவித்திருப்பதோடு, புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்‍கு ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். 

Night
Day