நெல்லை : ஒரு மாதத்தை கடந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாத அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் ஒரு மாதத்தை கடந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நெல்லையில் வரலாறு காணாத பெருமழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. அதோடு அதிக அளவில் புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு மாதம் கடந்தும் சீரமைக்கப்படாத சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day