தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளது. ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலப்படுத்தப்படுகிறது. இக்காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், சென்னை காசிமேடு மீன்பிடி சந்தை வெறிச்சோடியது. காசிமேடு துறைமுகத்தில் படகுகள், வலைகள் ஆகியவற்றை பராமரிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்னர்.

நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட துறைமுக பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலத்தால், பல கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர். 




Night
Day