சிக்கன் கிரேவியை திருடித் தின்ற திமுகவினர்! - வெறுப்புடன் வெளியேறிய மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் சிறுமுகையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட சிக்கன் கிரேவியை திமுகவினர் திருடித் தின்று ருசி பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளேபாளையம் ஊராட்சிக்கான வளர்ச்சி பணிகள் தொடக்க விழா, சிறுமுகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டார். இந்த வளர்ச்சி பணிகள் தொடக்க விழாவானது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தேர்தல் பிரச்சார கூட்டமாக மாறியது. 

இந்நிலையில் திமுக கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்காக அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்குபின் சுமார் 15 நபர்களுக்கு மட்டும் குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவியை வழங்கிய திமுக எம்.பி. ஆ.ராசா வீடியோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றார். 

மற்றவர்களுக்கு உணவு வழங்கும் படி கூறிவிட்டு திமுக எம்பி ஆ.ராசா புறப்பட்டதும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவியை திமுகவினர் உள்ளே எடுத்து சென்று ஒருபிடி பிடித்தனர். ஒரு சிலருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்பட்ட நிலையில் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் சாப்பாடு வரும் என எண்ணி காத்திருந்தனர்.

மேலும் சிலர் எங்கே சாப்பாடு கிடைக்கிறது என தெரியாமல் சுற்றி திரிந்தனர். சிறிது நேரம் கழித்து உணவு கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். 

ஆனால் அறையின் உள்ளே இருந்த திமுகவினர் மட்டும் சிக்கன் கிரேவி சாப்பிட்டதை பொதுமக்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

மக்களுக்காக ஏற்பாடு செய்த அசைவ உணவை திமுகவினர் மட்டுமே திருடி தின்றது பொதுமக்களிடையே பெரும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day