10 கோடி நிமிட பார்வைகளை கடந்த 'கூச முனுசாமி வீரப்பன்'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்து வெளியான கூச முனுசாமி வீரப்பன் ஆவணப்படம் 10 கோடி நிமிட பார்வைகளை கடந்துள்ளது. சந்தன கடத்தல் வீரப்பன் குறித்து ஜீ5 ஓடிடி தளத்தில் கூச முனுசாமி வீரப்பன் என்ற ஆவணப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ஆர்.வி.பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில், இதுவரை வெளியாகாத வீரப்பனின் நேர்காணல் வீடியோக்கள் இடம் பெற்று இருந்தன. இந்நிலையில், 10 கோடி நிமிட பார்வைகளை கடந்துள்ளதாக ஜீ5 அறிவித்துள்ளது.

varient
Night
Day