ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - தால் ஏரி உறைந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் வீசுவதுடன் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் பனிக்‍கட்டிகள் படர்ந்து வருகின்றன. ஸ்ரீநகரில் வெப்பநிலை மிகவும் குறைந்து வருகிறது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 ​டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 12 ​டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது. பனி, கடும் குளிர் வீசுவதால் படகுப்போக்‍குவரத்தும் குறைந்து வருகிறது.  சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் மிகப்பெரிய ஏரியான தால் ஏரியில் நீர் உறைந்து பனிக்‍கட்டிகள் படர்ந்து வருகின்றன. வரும் நாட்களில் கடும் பனி நிலவும் என்றும், வெப்பநிலை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day