ஈரானின் ஏவுகணை தாக்‍குதலுக்‍கு பாகிஸ்தான் பதிலடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏவுகணை தாக்‍குதலுக்‍கு பதிலடியாக ஈரானில் உள்ள பலோச் பிரிவினைவாத குழுக்‍களின் முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படையினர் குண்டுகளை ​வீசி தாக்‍கினர். இதில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவை குறிவைத்து ஈரான் புரட்சிப்படை 2 நாட்களுக்‍கு முன் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்‍கியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஈரானில் உள்ள சிஸ்தான்-பலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை பலோச் பிரிவினைவாத குழுக்‍களின் முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படையினர் குண்டு வீசி தாக்‍கினர். இதில் பலர் உயிரிழந்து இருக்‍கலாம் என கருதப்படுகிறது. ஈரானும், பாகிஸ்தானும் தாக்‍குதல் நடத்துவதால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

Night
Day