கும்கி - 2 படத்தை வெளியிட இடைக்கால தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குனர் பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் கும்கி திரைப்படம் 2012 ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் 2வது பாகம் 13 ஆண்டுகளுக்குப்பின் தற்போது உருவாகியுள்ளது. பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி-2 திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கும்கி-2 திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கும்கி-2 படத்தை தயாரிக்க, 2018 ம் ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிரபு சாலமன், கும்கி-2 படம் வெளியிடுவதற்கு முன் வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாக ஒப்பந்தம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நவம்பர் 14 ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதாகவும், ஆகவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சந்திரபிரகாஷ் ஜெயின் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.  

Night
Day