வேட்டையன் திரைப்படத்தை முடிப்பதில் தீவிரம் காட்டும் ரஜினி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு 2 முதல் 3 வார படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தில் நடிக்கும் ரஜினிக்கு 2 முதல் 3 வார படப்பிடிப்பு மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 171 திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அப்படம் வரும் ஏப்ரலில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

varient
Night
Day