தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
யோகாசனத்தில் உலக சாதனைபடைத்து மயிலாடுதுறை திரும்பிய நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்லவராயன்பேட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 10 மாணவர்கள் தென்காசியில் நடைபெற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று தலையில் டம்ளரில் தண்ணீர் வைத்தபடி யோகாசனம் செய்தனர். இந்த நிகழ்வு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனிடையே பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மாணவர்கள் யோகாசனம் செய்து காட்சி அனைவரது பாராட்டை பெற்றனர்.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...