நண்பர் வெற்றி துரைசாமி மறைவால் நடிகர் அஜித் சோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது நண்பர் வெற்றி துரைசாமி மறைவையடுத்து நடிகர் அஜித்குமார் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி சட்லஜ் நதியில் கார் விழுந்து விபத்திற்குள்ளானதில் மாயமானார். அவரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டு இன்று சென்னை வரவுள்ளது. இந்நிலையில், அவரது மறைவுக்கு அஜித்குமார் மனைவி ஷாலினி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அஜித்குமார் சோகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காக என்ற வெற்றி துரைசாமியின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

varient
Night
Day