ரூ.350 தான் கொடுத்தாங்க... விடுதலை-2 துணை நடிகர்கள் புலம்பல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை-2 படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு முறையான ஊதியம் வழங்கபடவில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ வைராலான நிலையில் முழு சம்பளத்தை படக்குழு செட்டில் பண்ணிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காண்போம்...

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி நடிகர் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியான விடுதலை திரைப்படமானது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் விடுதலை - 2 படப்பிடிப்பானது தற்போது நடைபெற்று வருகிறது. 
 
90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மீதமுள்ள காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இந்த படத்தின் காட்சிகள் தற்போது தென்காசி சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விடுதலை 2 படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து துணை நடிகர்கள் சிலர் அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களுக்கு பேசிய ஊதியம் வழங்காமல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் தென்காசி ரயில் நிலையம் முன்பு தங்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் விதம் சம்பளம் பேசிய நிலையில் 350 ரூபாய் மட்டுமே கொடுத்து அனுப்பி வைத்ததாக கூறி வேதனையை கொட்டித்தீர்த்தனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தென்காசி ரயில் நிலையத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து துணை நடிகர்கள் சிலரை தினக்கூலிக்கு அழைத்து வந்த ஏஜென்ட் ஒருவர் பேசியபடி முழுமையான சம்பளத்தை வழங்குவதாக ஒப்புக்கொண்டு மீதமுள்ள பணத்தை அவர்களில் உள்ள ஒருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

Night
Day