அஜித் - ஆதிக் கூட்டணி உறுதி : தயாரிப்பாளர் தனஞ்செயன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித்குமாரின் 63வது திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இயக்குநர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அதில், மார்க் ஆண்டனி திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஆதிக்கை வாழ்த்தியதாகவும், அப்போது அவர் அஜித்தை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவார் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, ஆதிக் தனது திருமணத்திற்கு அழைப்புவிடுத்த போது, தாங்கள் கூறியது நிஜமாகியுள்ளது என்றும், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை அதுகுறித்து தெரிவிக்கமாட்டேன் என்று சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். 

Night
Day