"டீன்ஸ்" திரைப்படம் : ரசிகர்களுடன் அமர்ந்து ஃபர்ஸ்ட் லுக்கை கண்டு ரசித்த பார்த்திபன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் டீன்ஸ் திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இப்படம், குழந்தைகளை மையமாக கொண்ட சாகச திரில்லர் படமாக உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தணிக்கைச் சான்றிதழுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அதனை, பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்தார்.

varient
Night
Day