விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரம் - 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் மகளிர் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய வடமாநில பெண், அவரது காதலனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 


டாடா நிறுவனத்தின் மகளிர் தங்கும் விடுதியில் பணிபுரிந்த பெண் ஒருவர் அவரது காதலன் உதவியுடன் அங்குள்ள குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒடிசாவை சேர்ந்த நீலுகுமாரி குப்தா அவரது காதலன் ரவி பிரதாப் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி., ஆட்சியர் தினேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

Night
Day