திருத்தணி தாக்குதல் சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒருவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். 

திருத்தணியில் ரயிலில் பட்டா கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த வடமாநில இளைஞரை இழுத்து சென்று, ரயில் நிலையம் அருகே பட்டா கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு, சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார். 

Night
Day