மத்திய பட்ஜெட் - பிரதமர் ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2026-2027-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு 2047 ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் பி.வி.ஆர்.சுப்பரமணியன், நிதி ஆயோக் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day