முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு கலிதா ஜியாவுடனான சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தல் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவி வகித்து, அந்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் எப்போதும் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.  2015 ஆம் ஆண்டு டாக்காவில் அவருடனான தமது அன்பான சந்திப்பை நினைவு கூர்வதாக குறிப்பிடடுள்ள பிரதமர் மோடி,  அவரது தொலைநோக்குப் பார்வையும் சித்தாந்தமும் இருநாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை தொடர்ந்து வழிநடத்தும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்

Night
Day