முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா மறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.

வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவரும், வங்கதேச முதல் பெண் பிரதமருமான கலிதா ஜியா,  நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 23ம் தேதி டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே கல்லீரல், மூட்டுவரி, நீரிழிவு மற்றும் இதய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.  நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவருக்கு வென்டிலேட்டர்  உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணி அளவில் கலிதா ஜியா உயிரிழந்ததாக வங்கதேச தேசியவாத கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 1991-1996 மற்றும் 2001-2006 என 2முறை  அவர் வங்கதேச பிரதமராக இருந்துள்ளார். கலிதா ஜியா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அங்கு வரும் பிப்ரவரியில் பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில் கலீதா ஜியாவின் மரணம் அவருடைய கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த அவரது மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் வங்கதேசம் திரும்பியிருந்தார். வங்கதேச அரசியலில் ஷேக் ஹசீனாவுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த கலிதா ஜியாவின் மறைவு அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day