இடைநிலை ஆசிரியர்கள் 5வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 5வது நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ம் தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி 5வது நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 311 என்ன ஆனது? என்ன ஆனது என தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், விளம்பர திமுக முதலமைச்சர் தங்களை ஏமாற்றி விட்டதாக போராட்டக்காரர்கள் குமுறியுள்ளனர். இதேபோல், கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம்  தொடரும் என இடைநிலை  ஆசிரியர்கள் உறுதியளித்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் நீதி தேவதை போல் கண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலின் போது அளித்த சம வேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day