சென்னை மாநகராட்சியில் பணி வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்கக் கோரி தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். அப்போது பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் போலீசார் வாகனத்திற்கு அடியில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 150 நாட்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கைது செய்ய முற்பட்டபோது தூய்மைப் பணியாளர்கள் சாலையில் படுத்து ஊருண்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் போலீஸ் வாகனத்திற்கு அடியில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், நிரந்த பணி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி போராடி வரும் தங்களை விளம்பர திமுக அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் தூய்மைப் பணியாளர்களை குண்டு கட்டாக கைது செய்தனர்.

Night
Day