"புதினின் இல்லம் குறிவைக்கப்பட்தாக வெளியான செய்தி கவலை அளிக்கிறது" - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் குறிவைத்தாக வெளியான செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விளாடிமிர் புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டி இருந்தார். இதை உக்ரைன் மறுத்திருந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொடர்ந்து நடைபெற்று வரும் இராஜதந்திர முயற்சிகள், மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை அடைவதற்கான மிகவும் சாத்தியமான பாதையை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளார். 

Night
Day