உலக ரேபிட் செஸ் : வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜுன் எரிகைசி, கொனேரு ஹம்பிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக ரேபிட் செஸ் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மற்றும் கொனேரு ஹம்பிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலக செஸ் கூட்டமைப்பு ஃபிடே  சார்பில் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் முதலில் நடந்த 'ரேபிட்  பிரிவில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பியும், ஓபன் பிரிவில் அர்ஜுன் எரிகைசியும் வெண்கலப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் உலக 'ரேபிட்' பிரிவில் 5 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை கொனேரு ஹம்பி படைத்தார். மேலும் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், இத்தொடரில் பதக்கம் கைப்பற்றிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அர்ஜுன் எரிகைசி படைத்தார். பதக்கம் வென்ற இருவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இப்போட்டி மீதான இருவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும்  இவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்றும் எக்ஸ் வலைதளத்தில பதிவிட்டுள்ளார். 

Night
Day