அரசு மருத்துவமனையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் பகுதியை சேர்ந்த சிறுமி 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், உறவினர் ஒருவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவியாக சிறுமி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சிறுமி வார்டில் உறங்கி கொண்டிருந்தபோது, நாககுடி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக தெரிகிறது. இதுகுறித்து, அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் ராமகிருஷ்ணனை போக்சோவில் கைது செய்தனர்.  

Night
Day